சென்னை: ஒரு நடிகராக தனது முதல் பிறந்த நாளை சண்முகப் பாண்டியன் இன்று கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
அவரது சகாப்தம் படத்திற்கு வந்ததை விட அதிக ரசிகர்கள் திரண்டு வந்து சண்முகப் பாண்டியனை வாழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜயகாந்த்தின் இளைய மகன்தான் சண்முகப் பாண்டியன். இவருக்கு நடிப்பு ஆர்வம் சின்ன வயதிலேயே முளை விட்டு விட்டது. இருந்தாலும் அதற்கான வயசு வர வேண்டும் என்று காக்க வைத்து இப்போது நடிகராக்க உள்ளார் விஜயகாந்த். சகாப்தம் படம் மூலம் தமிழ்த் திரையுலகின் நடிகராக மாறி விட்டார் சண்முகப் பாண்டியன்.
நல்ல உயரமாக காணப்படும் சண்முகப் பாண்டியன், தனது தந்தை ஸ்டைலில் புருவம் அசைத்து, விழிகளில் கோபத்தை கொப்பளித்து ஆவேசமாக சண்டை போடுகிறார். காமெடி செய்கிறார், நடிக்கிறார்.
சகாப்தம் படம் சரியான ரெஸ்பான்ஸ் இல்லாவிட்டாலும் கூட முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததே பெரிய வெற்றிதான். அடுத்தடுத்த படங்களில் பட்டை தீட்டபட்டு அவர் வைரமாக மாறுவார் என்று நம்பலாம்.
சரி மேட்டருக்கு வருவோம்.. சண்முகத்திற்கு இன்று பிறந்த நாள். நடிகராக இது அவருக்கு முதல் பிறந்த நாள் என்பதால் சண்முகப் பாண்டியன் பெரும் உற்சாகத்துடன் காணப்பட்டார்.
தனது வீட்டில் இன்று காலை எழுந்ததும், குளித்து, புத்தாடை அணிந்து கேக் வெட்டினார். பின்னர் தனது தந்தை விஜயகாந்த், தாயார் பிரேமலதா ஆகியோரிடம் கேக் கொடுத்து காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.
அதன் பிறகு வீட்டுக்கு வெளியே வந்தார். அங்கு தெருவோரமாக திரண்டு நின்றிருந்த தனது ரசிகர்களைச் சந்தித்து அவர்களின் வாழ்த்துகளைப் பெற்றார். காஞ்சிபுரம் மா்வட்ட சகாப்தம் தலைமை ரசிகர் நற்பணி மன்றத் தலைவர் அனகை விஜயராஜ் தலைமையில் ரசிகர்கள் திரண்டு வந்து சண்முகத்தை வாழ்த்தினர்.
தேமுதிக எம்.எல்.ஏ. அனகை முருகேசனின் மகன்தான் இந்த விஜயராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment