இது ஆனந்தம் விளையாடும் வீடு... ”ஊருடன் கூடி வாழ” சொந்த ஊரில் வீடு கட்டும் ராஜகுமாரன் – தேவயானி!

|

சேலம்: உறவுகளுடன் கூடி வாழ்வதற்காக சொந்த ஊரில் புதிதாக வீடு கட்டி வருவதாக நடிகை தேவயானியின் கணவர் இயக்குனர் ராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள தேவூரில் சினிமா நடிகை தேவயானியின் கணவரும், சினிமா இயக்குனருமான ராஜகுமாரனின் உறவினர் வீடு உள்ளது.

இது ஆனந்தம் விளையாடும் வீடு... ”ஊருடன் கூடி வாழ” சொந்த ஊரில் வீடு கட்டும் ராஜகுமாரன் – தேவயானி!

அங்கு வந்த ராஜகுமாரன், "நீ வருவாய் என..., விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன், திருமதி தமிழ் உள்ளிட்ட நான் இயக்கிய படங்கள் ஒவ்வொன்றிலும் வித்தியாசமான கதையை தந்துள்ளேன்.

ராதே பிலிம்ஸ், இனியா மியூசிக்கில் நான் சொந்தமாக தயாரித்து இயக்கியுள்ள "திருமதி தமிழ்" படத்தில் சங்க இலக்கியங்கள் அனைத்தும் ஒன்று சேர்த்து பாடலாக உருவான "திருக்குறள் இடையழகி" பாடலும், "தமிழ் தமிழ்" பாடலும் இந்த ஆண்டு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆண்டுவிழாவில் முதன்மை பாடலாக போடப்பட்டு மாணவ, மாணவிகள் நடனம் ஆடி வருகிறார்கள்.

"விண்ணுக்கும் மண்ணுக்கும்" படத்தில் வரும் காதல் கதையை போல நானும், நடிகை தேவயானியும் காதல் திருமணம் செய்து கொண்டோம். இப்போது எங்களுக்கு இனியா, பிரியங்கா என 2 மகள்கள் உள்ளனர்.

நான் பல்வேறு மாநிலம் மற்றும் பல்வேறு நாடுகளுக்கு படப்பிடிப்புக்கு சென்று வந்தாலும் சொந்த ஊர், மண்ணில் வந்து தங்கி இருந்தால்தான் எனக்கு மகிழ்ச்சி.

அதற்காக அந்தியூர் அருகே ஆலாம்பாளையத்தில் என் சொந்த நிலத்தில் உறவுகளுடன் கூடி வாழ்வதற்காக புதிதாக வீடு கட்டியுள்ளேன். இந்த மாதத்தில் புதுமனை புகுவிழா நடைபெறும்" என்று தெரிவித்துள்ளார்.

 

Post a Comment