உத்தம வில்லன் ரிலீசாவதால், அதனுடன் மோதத் தயங்கி ஜாம்பவான்களே ஜகா வாங்கினாலும், மே 1-ம் தேதி தன் வை ராஜா வை படத்தை வெளியிடும் ஐஸ்வர்யா தனுஷ் மாற்றிக் கொள்ளவில்லை.
முதலில் ஏப்ரல் 17-ம் தேதிதான் உத்தம வில்லனை வெளியிடுவதாக இருந்தார்கள். ஆனால் சென்சார் ஆவதில் சிக்கல் இருந்ததால் மே 1-ம் தேதிக்கு தள்ளிப் போட்டார்கள்.
இதனால் ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2 படங்கள் சிக்கலின்றி வெளியாகிவிட்டன.
மே 1-ம் தேதியன்று மாஸ், புறம்போக்கு என்கிற பொதுவுடைமை, வை ராஜா வை படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கமல் படம் அதே தேதியில் வெளியாகிறது என்பதால், மாஸ் மற்றும் புறம்போக்கு மே 15-ம் தேதிக்கு தள்ளிப் போய்விட்டன.
ஆனால் ஐஸ்வர்யா தனுஷ் மட்டும் ரிலீஸ் தேதியை மாற்றிக் கொள்ளவில்லை. ஏற்கெனவே அறிவித்தபடி மே 1-ம் தேதி உத்தம வில்லனுடன் மோதுகிறது வை ராஜா வை!
Post a Comment