அஜீத் படத்தில் வில்லனாகும் கபீர் சிங்?

|

அஜீத்தின் 56 வது படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க நடிகர் கபீர் சிங்கிடம் பேசி வருகின்றனர்.

படத்துக்குப் படம் வித்தியாசமான வில்லன்களோடு மோதுவது அஜீத் வழக்கம். இவரது பில்லா 2 படத்தில் நடித்த பிறகுதான் வித்யுத் ஜம்வாலுக்கு பெரிய பிரேக் கிடைத்தது தமிழில். அதன் பிறகுதான் துப்பாக்கியில் நடித்தார்.

அஜீத் படத்தில் வில்லனாகும் கபீர் சிங்?

என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் ஏற்ற வில்லன் வேடம் அவருக்கு பெரிய திருப்புமுனையைத் தந்தது.

இப்போது சிவா இயக்கும் அஜீத்தின் 56வது படத்துக்கு கபீர் சிங்கை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளார்களாம். கபீர் சிங் தெலுங்கில் ஜில் படத்தில் வில்லனாக நடித்தவர். இப்போது ரவிதேஜா நடிக்கும் கிக் 2 படத்திலும் அவர்தான் வில்லன். புனித் ராஜ்குமாரின் கன்னடப் படத்திலும் நடித்து வருகிறார்.

கம்பீர தோற்றம், வில்லன்களுக்கே உரிய முக அமைப்பு எல்லாம் கச்சிதமாகப் பொருந்தியிருப்பதால் இப்போது கபீர் சிங்குக்கு ஏக வரவேற்பாம்.

 

Post a Comment