மிக நெருக்கமான அன்போடு அமைதியாக வாழ்ந்து வரும் தம்பதிகள் வாழ்க்கையில், ஒரு சமயத்தில் அந்த நெருக்கமே எதிரியாக மாறுகிறது. அது என்பதை ஒரு உண்மைச் சம்பவத்தின் பாதிப்பில் எடுக்கப்பட்டுள்ள படம்தான் நெருக்கம்.
கதாநாயகனாக அஸ்வினி கார்த்திக், கதாநாயகிகளாக விதர்ஷா, சனா நடிக்க, சசி இயக்கியிருக்கிறார். படத்தின் கடைசி காட்சி வரை ஒருவித த்ரில் இருப்பதுடன்
காதலுடன் கூடிய நகைச்சுவைக் காட்சிகளும் இருக்கின்றன. ஒரு நல்ல பொழுது போக்கு நிறைந்த படமாகவும் வந்திருக்கிறது, என்கிறார் சசி.
குற்றங்கள் எங்கே வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் அதை எதிர்கொள்ளும் பக்குவம் எல்லோருக்கும் வேண்டும் என்பதை உணர்த்தும் படமாகவும் இந்தம் படம் இருக்கும் என்கிறார் அவர்.
முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகி இருக்கும் நெருக்கம் படம் தமிழக கேரள எல்லைப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது.
Post a Comment