மவுசை நகர்த்த தெரிஞ்சவங்கெல்லாம் விமர்சனம் பண்றாங்களே...! - சுகாசினி திடீர் ஆவேசம்

|

மவுசை நகர்த்தத் தெரிஞ்சவங்கெல்லாம் சினிமா விமர்சனம் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. இதை அனுமதிக்கக் கூடாது என்று நடிகை சுகாசினி ஆவேசமாகப் பேசினார்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஓ காதல் கண்மணி' படம் வரும் ஏப்ரல் 17-ம் தேதி வெளியாகிறது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் மணிரத்னம், பாடலாசிரியர் வைரமுத்து, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், நடிகை சுஹாசினி, நாயகன் துல்கர் சல்மான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மவுசை நகர்த்த தெரிஞ்சவங்கெல்லாம் விமர்சனம் பண்றாங்களே...! - சுகாசினி திடீர் ஆவேசம்

அப்போது சுகாசினி பேசும்போது, ‘‘ஒரு திரைப்படத்தை விமர்சிக்க பத்திரிகையாளர்களாகிய உங்களுக்குத்தான் உரிமையுண்டு.

ஏன்னா உங்களுக்கு அனுபவம் இருக்கு. அதற்கான தகுதியுமிருக்கு.

ஆனால் இப்போவெல்லாம் சோஷியல் மீடியாவில் எல்லாருமே விமர்சனம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. கம்ப்யூட்டர் மவுஸை நகர்த்தத் தெரிஞ்சவங்க எல்லாரும் விமர்சனம் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க.

இதையெல்லாம் பத்திரிகையாளர்களாகிய நீங்க அனுமதிக்கக் கூடாது. இதை தடுக்கணும். இனி பத்திரிகையாளர்கள் மட்டும்தான் சினிமா விமர்சனம் செய்யணும்,'' என்றார் சுஹாசினி.

அப்படியெல்லாம் ஒரேயடியாச் சொல்ல முடியாதுங்க.. பணம் கொடுத்து படம் பாக்கிற அத்தனை பேரும் ஏதோ ஒரு வகையில் விமர்சகர்தான்!

 

Post a Comment