திருமண முறையையே கொச்சைப்படுத்துகிறது மணிரத்னம் படம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பேதும் சொல்லாத மணிரத்னம், என் படம் ரிலீசான பிறகு பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
இந்தப் படத்தின் இசை வெற்றி விழாவில் பங்கேற்ற மணிரத்னத்திடம், இந்தப் படத்தில் நீங்கள் திருமண முறையையே கொச்சைப்படுத்தி இருப்பதாகவும், அதனால்தான் யு சான்று கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறதே? என்று கேட்டபோது, "படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். என் மொழி சினிமா படத்தில்தான் கதையை கூறுவேன். வேண்டுமென்றே எதையும் திணிக்க மாட்டேன்," என்று பதில் கூறினார்.
ஆனால் மணிரத்னம் சொல்லாமல் மறைத்ததை, அந்த விழாவுக்கு வந்த வைரமுத்து வெளிப்படுத்திவிட்டார்.
வைரமுத்து கூறுகையில், "மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி' கலாச்சார அதிர்ச்சியை உருவாக்குகிற படம். மேல்நாட்டு தாக்கத்தால் கலாசாரங்கள் மாறுகின்றன. வரும் காலத்தில் திருமண முறை இருக்குமா என்ற சந்கேங்கள் எழுந்துள்ளது. அந்த வகையில் பரிசோதனை முயற்சியாக இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது," என்றார்.
இருபது ஆண்டுகளாக கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருக்கும் வெற்றியை அடைய, இந்த கலாச்சார அதிர்ச்சி மணிரத்னத்துக்கு உதவுமா.. பார்க்கத்தானே போகிறோம்!
Post a Comment