தமிழ் திரையுலகில் இப்போது பெரும்பாலானோரின் கண்கள் விஷாலின் நடவடிக்கைகள் மீதுதான்.
கடந்த இரு ஆண்டுகளாக நடிகர் சங்க நிர்வாகிகளின் நடவடிக்கைகளை விமர்சித்து வருகிறார். அதற்காக அவரைக் கடுமையாகத் தாக்கிப் பேசி வருகிறார் நடிகர் சங்க பொதுச் செயலர் ராதாரவி.
திடீரென்று சில வாரங்களுக்கு முன் தனது ரசிகர் மன்றத்தினரைக் கூட்டிய விஷால், மன்றத்தை பலப்படுத்த ஆலோசனை செய்தார்.
நடிகர் சங்கத்துக்கு அடுத்த மாதம் (மே) இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்றும் பொறுப்பு கொடுத்தால் ஏற்றுக் கொள்வேன் என்றும் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தன் ஆதரவு நடிகர்களை எல்லாம் அழைத்து விஷால் ரகசிய கூட்டம் நடத்தி உள்ளார். விஷால் வீட்டில் இக்கூட்டம் நடந்துள்ளது. நடிகர்கள் நாசர், ஆனந்தராஜ், பூச்சி முருகன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர். பல்வேறு விஷயங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. நடிகர் சிவகுமார் விஷாலுக்கு வெளிப்படையாக ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment