சென்னை: தனது தினசரி நடவடிக்கைகளை ஒரு தினசரியில் பட்டியலிட்டுள்ளார் கமல் ஹாஸன்.
அவரது தினப் பட்டியல் என்ன? இதோ...
எனக்கு சாட் கல்ட்ஜென்னின் (Chad Kultgen) மனதை டிஸ்டர்ப் பண்ணும் எழுத்து பிடிக்கும். நேர்மையாக தீவிரமாக இருக்கும்.
சமையல் கற்றுக்கொள்கிறேன். எனக்கு கவுதமி உதவுகிறார். ரசம் மற்றும் முருங்கைக் காய் சாம்பார் தயார் செய்ய கற்றுக்கொண்டேன்.
அவ்வப்போது பியானோ கற்றுக்கொள்கிறேன். இதற்கு முன்பு கார்த்திக் ராஜாவிடம் கற்றுக்கொண்டேன். அவர் மிகவும் நொந்துகொண்டார். எதையும் புரிந்துகொள்ளாத மாதிரி பாவனை செய்வதாக கூறினார்.
ஒரு மாதத்துக்கு 100 மணி நேரம் நகரும் படங்களைப் பார்க்கிறேன். குறைந்தபட்சம் 30 படங்கள்.
நான் எல்லா அமெரிக்க, ஐரோப்பிய டிவி சிரியல்களையும் பார்ப்பேன். போர்ஜியா, மார்கோ போலோ, பீகி பிளைண்டர்ஸ், பிரேகிங் பேட், கில்லிங் போன்றவை பிடிக்கும்.
முக்கியமாக நான் ஆவணப் படங்களை அதிகம் பார்ப்பேன். படங்களை விடவும் இவைதான் நல்ல யோசனைகளை வழங்குகின்றன.
நான் பிலிம் பெஸ்டிவல்களுக்குச் செல்வதில்லை. அது அரசியலாக்கப்பட்டுவிட்டது. தோளில் ஒரு பையை மாட்டிக்கொண்டு பெஸ்டிவலுக்குச் சென்று, படத்தைப் பற்றிய குறிப்புகள் எடுத்து, டீக்கடையில் உட்கார்ந்து படத்தைக் கிழிகிழி என கிழித்து திரும்பிவிட விரும்புகிறேன்.
இவ்வாறு கமல் கூறியுள்ளார்.
Post a Comment