சென்னை: நடிகர் தனுஷ் கன்னடப் படமொன்றில் பாடல் பாடியுள்ளார். அப்பாடலின் வரி, ‘நோ ப்ராப்ளம்' எனத் தொடங்குகிறது.
தேசிய விருது வாங்கிய நடிகர் தனுஷ், சிறந்த பாடகர், பாடலாசிரியர் என்பது அனைவருக்கும் தெரியும். ஏற்கனவே, அவர் தனது புதுக்கோட்டையிலிருந்து சரவணன், தேவதையைக் கண்டேன், புதுப்பேட்டை உள்ளிட்ட பலப் படங்களில் பாடியுள்ளார்.
3 என்ற படத்தில் இவர் பாடிய ‘ஒய் திஸ் கொலைவெறி' பாடல் பட்டித் தொட்டியெங்கும் சென்றது. அதேபோல், அனேகன் படத்தில் இடம்பெற்ற ‘டங்காமாரி' பாடலும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் விரும்பப் படும் பாடலாக உள்ளது.
இதனால், தொடர்ந்து மற்ற நடிகர்களின் படங்களில் பாடும் வாய்ப்பும் தனுஷிற்கு வந்த வண்ணம் உள்ளது. அவற்றில் தமிழ்ப்படங்கள் மட்டுமின்றி, பிற மொழிப்படங்களும் அடக்கம்.
நடிப்பில் பிசியாக இருப்பதால், அவற்றில் குறிப்பிட்ட பாடல்களை மட்டுமே தேர்வு செய்து தனுஷ் பாடி வருகிறார். இந்நிலையில், கன்னட படத்திற்காக பாடல் ஒன்றை அவர் பாடியுள்ளார்.
கன்னடத்தில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவ்ராஜ் குமார், வஜ்ரகயா என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு தனுஷ் பாடினால் நன்றாக இருக்கும் என்று கருதி, அவரை பாட வைத்துள்ளனர்.
‘நோ பிராபிளம்' எனத் தொடங்கும் இந்தப் பாடல் அனைவரும் ரசிக்கும் வண்ணம் இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Post a Comment