ஸ்பெக்டர் படப்பிடிப்பில் ஜேம்ஸ்பாண்டாக நடித்து வரும் டேனியல் க்ரெய்க்குக்கு காயம் ஏற்பட்டது.
அரை நூற்றாண்டு காலமாக ஆக்ஷன் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது ஜேம்ஸ்பாண்ட் படங்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியாகும் இந்த ஜேம்ஸ்பாண்ட் படங்களின் வரிசையில், புதிய படைப்பாக உருவாகிவரும் ‘ஸ்பெக்டர்' படத்தில் டேனியல் கிரெய்க் (47) கதாநாயகனாக நடித்து வருகிறார்.
கடந்த மாதம் ஆஸ்திரியாவின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் நடைபெற்ற ஒரு அதிரடி சண்டைக்காட்சி படப்பிடிப்பின்போது இவரது கால் மூட்டில் லேசான காயம் ஏற்பட்டது.
இந்த காயத்தையும் பொருட்படுத்தாமல் பக்கிங்ஹாம்ஷைர் பகுதியில் உள்ள பைன்வுட்ஸ் ஸ்டூடியோவில் மற்றொரு சண்டைக் காட்சியில் சமீபத்தில் பங்கேற்றார் டேனியல் கிரெய்க்.
அப்போது மூட்டில் ஏற்பட்டிருந்த காயம் மேலும் அதிகமானது. இதனால், அவர் வலியால் துடித்தார். இதனையறிந்த அவரது உதவியாளர்கள் உடனடியாக நியூ யார்க் நகரில் உள்ள டேனியல் கிரெய்க்கின் டாக்டர்களைத் தொடர்பு கொண்டு அவசர ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்யுமாறு தகவல் அளித்தனர்.
உடனடியாக இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவின் நியூ யார்க் நகருக்கு அவர் அழைத்து வரப்பட்டார். கடந்த ஈஸ்டர் அன்று அங்கு அவரது கால் மூட்டில் அவசரமாக சிறிய ஆபரேஷன் செய்யப்பட்டது. தற்போது ஓய்வு எடுத்துவரும் க்ரெய்க் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என ‘ஸ்பெக்ட்ர்' படத்தைத் தயாரிக்கும் எம்ஜிஎம் அறிவித்துள்ளது.
Post a Comment