விழுந்து, விழுந்து சிரிக்கும் 'வின்னர்' திரைப்படத்தை எடுத்த தயாரிப்பாளரின் கதி தெரியுமா?

|

சென்னை: 'வின்னர்' திரைப்படத்து காட்சிகளை மக்கள் விழுந்து, விழுந்து ரசிக்கும் நிலையில், அதன் தயாரிப்பாளர் ராமச்சந்திரனோ, பணத்தை இழந்துவிட்டு, திரைப்படங்களில் சிறு, குறு வேடங்களில் நடித்து வருகிறார் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..

விழுந்து, விழுந்து சிரிக்கும் 'வின்னர்' திரைப்படத்தை எடுத்த தயாரிப்பாளரின் கதி தெரியுமா?

வைகை புயல் வடிவேலு நடித்த திரைப்படங்களில் முக்கியமான 'வின்னர்'. சுந்தர் சி இயக்கிய, இப்படத்தில் பிரசாந்த், கிரண், நம்பியார், வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படத்தில் வடிவேலு ஏற்றிருந்த கைப்புள்ள கதாப்பாத்திரம், இப்போதும் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைப்பது. ஆனால், இந்த படத்தின் தயாரிப்பாளர் ராமச்சந்திரன், பணத்தையெல்லாம் இழந்துவிட்டு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். அப்படியானால், வின்னர் தோல்வி படமா என்ற கேள்வி எழும். ஆனால், பெயருக்கு ஏற்பவே, வின்னர் வெற்றி படம்தான் என்பதுதான் இதில் வியப்பு.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவரான ராமச்சந்திரன் கூறுகையில், "சொத்து, நிலங்களை விற்று படம் தயாரிக்கதான் சென்னை வந்தேன். ஆனால், 2 கோடியில் முடிய வேண்டிய படம் ரூ.4 கோடிக்கு எகிறிவிட்டது. ஆனால், அந்த படத்துக்கு ரூ.2 கோடிதான் மதிப்பு என்று வினியோகஸ்தர்கள் கூறிவிட்டனர். எனவே நஷ்டமாகிவிட்டது.

வின்னர் பட காட்சிகளை டிவிகளில் போட்டா ரசிகர்கள் சிரிக்கிறார்கள். எங்கள் வீட்டில் டிவியை ஆப் செய்துவிடுகிறோம். நஷ்டத்துக்கு பிறகு, சிறு, குறு வேடங்களில் நடித்து வருகிறேன். இதுவரை 70 படங்களி் நடித்துவிட்டேன்" என்று கூறும் ராமச்சந்திரன், மீண்டும் படம் தயாரிக்க வரப்போவதாகவும் நம்பிக்கையோடு கூறியுள்ளார்.

சமீபத்தில் வெளியான ‘கள்ளப்படம்' படத்தில் ஒருகாலத்தில் சினிமா தயாரிப்பாளராக இருந்து, இப்போது தெருவில் திரிந்து கொண்டிருப்பவரான கேரக்டரிலும், இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment