சென்னை: விஜய் சேதுபதி நடித்து வரும் "மெல்லிசை", ''நானும் ரவுடிதான்" ஆகிய 2 படங்களும் வருகிற ஜூன் மாதம் திரைக்கு வர இருக்கின்றன.
மெல்லிசை படத்தில் விஜய் சேதுபதியுடன் காயத்ரி, ரமேஷ் திலக், சோனியா தீப்தி ஆகியோர் நடித்து வருகிறார்கள். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி வருகிறார். படம் முடிவடையும் நிலையில் உள்ளது.
விஜய் சேதுபதி முதன்முதலாக நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் படம் "நானும் ரவுடிதான்". இந்தப் படமும் வேகமாக வளர்ந்து வருகிறது. விக்னேஷ்வரன் இயக்கி வருகின்றார். இவர் போடா போடி படத்தை இயக்கியவர்.
இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஒரே மாதத்தில் அடுத்தடுத்து தனது 2 படங்கள் வெளிவருவதால் விஜய் சேதுபதி மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். அதே சமயம், இரண்டு படங்களும் வெற்றி பெற வேண்டுமே என்ற பதற்றத்திலும் அவர் இருந்து வருகிறார்.
Post a Comment