இது என்ன மாயம்... கொடுக்குமா விஜய்க்கு?

|

தலைவா, சைவம் என அடுத்தடுத்த சறுக்கல்களைச் சந்தித்த இயக்குநர் விஜய், இப்போது விக்ரம் பிரபுவுடன் கை கோர்த்து களமிறங்கியுள்ளார்.

படம் இது என்ன மாயம்.

இதில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்தப் படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ்குமார்தான் இசை.

சண்டமாருதம் படத்தைத் தொடர்ந்து மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் ஆர்.சரத்குமார், ஆர்.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கிறார்கள்.

இது என்ன மாயம்... கொடுக்குமா விஜய்க்கு?

படம் பற்றி இயக்குனர் விஜயிடம் கேட்டோம்..

"இது காதல் சம்மந்தப்பட்ட படம்தான்.. காதல்ங்கிறது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயம். அது யாருக்கு வருகிறது, அவர்களுக்கு அது எந்த கால கட்டத்தில் வருகிறது என்பது தான் காதலின் மகத்துவம். ஒருவருக்கு அது, ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் காதல் பூக்கிற தருணம் இனிமையானது. அதைத்தான் இது என்ன மாயம் பிரதிபலிக்கும். இதில் இரண்டு கால கட்டங்கள்! ஒன்று ஜாலியாகத் திரிந்த கல்லூரி வாழ்க்கை...

இன்னொன்று கல்லூரி காம்பவுண்டை விட்டு வந்து நிகழ்கால வாழ்க்கையில் கடந்த கால இனிமையை நினைத்து பார்க்கும் காலகட்டம்! எனக்கு எல்லாம் மறந்து போச்சு என்று சொல்கிறவன் கூட தனது காதலை மறக்க முடியவில்லை என்றே சொல்வான்.

அழகான காதலனாக அருண் பாத்திரத்தில் விக்ரம் பிரபு வாழ்ந்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட கதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

நான், நீரவ் ஷா, ஜி.வி.பிரகாஷ்குமார், நா.முத்துக்குமார் என்கிற ஒரே சிந்தனையாளர்கள் இதிலும் கை கோர்க்கிறோம் ஜெயிப்பதற்காக. இந்த வெற்றியில் மேஜிக் பிரேம்ஸ் சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் மூவரும் கூட இணைந்திருக்கிறார்கள் ஜெயிப்பதற்காக," என்றார் இயக்குநர் விஜய்.

இப்படம் வரும் மே மாதம் 1ஆம் தேதி ரிலீஸாகும் என கூறப்படுகிறது. ஏற்கனவே மே 1ம் தேதி சூர்யாவின் மாஸ்' ரிலீஸாகவுள்ள நிலையில் தற்போது அந்த படத்துடன் விக்ரம் பிரபுவின் படமும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment