சென்னை: நடிகை அஞ்சலி, காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடிக்கின்றார் என்ற செய்தி கோலிவுட்டில் உலா வந்துக் கொண்டிருக்கின்றது.
சூரி என்றாலே நம் நினைவிற்கு வருவது பரோட்டா தான். "வெண்ணிலாக் கபடி குழு" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர் பரோட்டா சூரி.
பின் அவர் நடித்து வந்தப் படங்களின் காமெடி அனைத்தும் சூப்பர் ஹிட். பின் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தன. பிசி நடிகராக மாறிவிட்டார் சூரி தற்போதய தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்களையும் ஹீரோவிற்கு நிகராகவேப் படம் முழுக்க நடிக்க வைக்கின்றனர்.
அதேப் போல் இப்போது சூரி நடித்துக் கொண்டிருக்கும் படம் அப்பாட்டக்கர். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு த்ரிஷா மற்றும் அஞ்சலி என இரண்டு ஜோடிகள். ஆனால் இப்படத்தின் ஸ்டில்களில் சூரி மற்றும் அஞ்சலி சேர்ந்து நடிப்பதுப் போல் அதிக ஸ்டில்கள் வெளியாகியுள்ளன.
எனவே சூரி தான் இப்படத்தில் அஞ்சலிக்கு ஜோடி என்று கிசு கிசுக்கப் படுகிறது. ஆனால் இதை மறுத்துள்ளார் சூரி. அஞ்சலியை ஒரு தலையாக காதலிக்கும் வேடத்தில் தான் நடிப்பதாகவும், அதனால் இதைப் பற்றிய வதந்திகளை கிளப்பவேண்டாம் எனவும் கூறியுள்ளாராம் சூரி.
Post a Comment