த்ரிஷாவுக்கு திருமணம் என்றதுமே, அவரது படவாய்ப்புகள் குறைந்துவிடும் என்றுதான் பலரும் எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் அவரே எதிர்ப்பாராத வகையில் ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிகின்றன த்ரிஷாவுக்கு.
தற்போது ஜெயம் ரவியுடன் இணைந்து ‘அப்பாடக்கர்' படத்திலும் தெலுங்கில் இரண்டு படங்களிலும் நடித்து வரும் த்ரிஷாவுக்கு, கமலுடன் நடிக்கவும் வாய்ப்பு வந்திருக்கிறது.
ஏற்கனவே கமலுடன் இணைந்து ‘மன்மத அம்பு' படத்தில் நடித்திருக்கிறார் த்ரிஷா. ஆனால் அந்தப் படம் இருவருக்குமே மகிழ்ச்சியைத் தரும்படி அமையவில்லை.
இந்நிலையில் புதிய படம் ஒன்றில் கமல் நடிக்கவுள்ளார். இது முழுக்க முழுக்க ஆக்ஷன் படம். இதில் கமலுக்கு த்ரிஷாவை ஜோடியாக்கப் போகிறார்களாம்.
இந்தப் புதிய படத்தை இயக்கும் வாய்ப்பை தன் உதவியாளர்களில் ஒருவருக்கே வழங்க கமல் முடிவெடுத்துள்ளாராம்.
படப்பிடிப்பு மே மாதம் கடைசி வாரத்தில் தொடங்கவிருப்பதாகச் சொல்கிறார்கள்.
Post a Comment