கமலின் உத்தம வில்லன் படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்தவர்கள், இந்தப் படம் வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவைப் படமாக உள்ளதாகவும், கமல் பிரமிக்க வைத்திருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
திருப்பதி பிரதர்ஸ் - ராஜ்கமல் தயாரித்துள்ள இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியை தனது நண்பர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு திரையிட்டுக் காட்டினார் லிங்குசாமி.
படத்தைப் பார்த்த பிறகு, அவர்களிடம் படம் குறித்த ஒளிவு மறைவற்ற கருத்தைக் கூறுமாறு கேட்டுக் கொண்டாராம்.
அவர்கள் கமலின் நடனம், நகைச்சுவையை வியந்து பாராட்டியுள்ளனர். குறிப்பாக, ஒரு பாடல் காட்சியில் கமலின் நடனம் இன்றைய இளம் நாயகர்களை மிஞ்சும் வகையில் அமைந்திருந்ததைச் சொல்லி வியந்துள்ளனர்.
இந்தப் படம் இன்னொரு பஞ்ச தந்திரம், வசூல் ராஜா எனும் அளவுக்கு சிறப்பாக வந்துள்ளது என்று கூறியதைக் கேட்டதும் மகிழ்ந்துபோய்விட்டாராம் லிங்குசாமி.
Post a Comment