உத்தம வில்லன் படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ளது ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.
சமீப காலமாக ஸ்டுடியோ கிரீனுக்கு சுக்கிர தசைதான்... அந்த நிறுவனம் தயாரித்து வெளியிட்ட கொம்பன் மிக நல்ல வரவேற்பைப் பெற்றது.
அடுத்து, இந்த நிறுவனம் பெற்ற படம் மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி. இந்தப் படமும் நன்றாகவே போனது.
இதையெல்லாம் பார்த்துதானோ என்னமோ, இப்போது உத்தம வில்லனை தமிழகத்தில் வெளியிடும் பொறுப்பை ஸ்டுடியோ கிரீனுக்கு தந்துள்ளது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்.
உத்தம வில்லனின் உலகளாவிய உரிமை ஈராஸ் நிறுவனத்துக்கு தரப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஸ்டுடியோ கிரீன் வெளியிடுகிறது.
Post a Comment