பெப்சிக்கு எதிராக மன்சூர் அலிகானின் டாப்சி: தொடங்கி வைத்தார் சுரேஷ் காமாட்சி!

|

சென்னை: பெப்சி அமைப்புக்கு எதிராக போட்டி சினிமா தொழிலாளர் சங்கத்தை உருவாக்கினார் நடிகர் மன்சூர் அலிகான். இந்த புதிய அமைப்பை வாழ்த்தி தொடங்கி வைத்தார் கங்காரு படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

அதிரடி என்ற படத்தை தயாரித்து இயக்கி வருகிறார் மன்சூர் அலிகான். சமீபத்தில் இதன் படப்பிடிப்பில் பெப்சி தொழிலாளர்கள் பங்கேற்காமல் வெளியேறினர்.

பெப்சிக்கு எதிராக மன்சூர் அலிகானின் டாப்சி: தொடங்கி வைத்தார் சுரேஷ் காமாட்சி!

இதனால் நீதிமன்ற உத்தரவு பெற்று வேறு தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்பை நடத்தினார். இந்த நிலையில் தமிழ்நாடு திரைப்பட படைப்பாளிகளின் ஒருங்கிணைந்த இந்திய கூட்டமைப்பு (டாப்சி- TOFCII) என்ற பெயரில் புதிய சங்கத்தை துவக்கியுள்ளார்.

இதனை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் அமைதிப்படை 2, கங்காரு படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

இந்த சங்கத்தில் நடிகர், நடிகைகள், ஒளிப்பதிவாளர்கள், நடன கலைஞர்கள், ஸ்டன்ட் பயிற்சியாளர்கள், கலை இயக்குனர்கள், பாடல் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் ரூ.2 ஆயிரம் செலுத்தி உறுப்பினராகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெப்சிக்கு எதிராக மன்சூர் அலிகானின் டாப்சி: தொடங்கி வைத்தார் சுரேஷ் காமாட்சி!

தொடக்க விழாவில் மன்சூர்அலிகான், ஜே.எம்.ஆரூண், பூவை ஜேம்ஸ், விடுதலை சிறுத்தைகள் வன்னியரசு, தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, திருமலை, ராஜா, தங்கராஜ், கே.பி. குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இச்சங்கத்தின் தலைவராக மன்சூர்அலிகான், செயலாளராக சந்திரசேகர், துணைத் தலைவராக லயன் ஆர்.எம்.தாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சங்கத்தின் சார்பில் உறுப்பினர்களுக்கு பல்வேறு சலுகைகள், நலத் திட்டங்களை அறிவித்தார் மன்சூர் அலிகான்.

 

Post a Comment