உத்தம வில்லன் மக்களைப் பற்றிய படம்.. மதங்களைப் பற்றியதல்ல! - கமல்

|

உத்தம வில்லன் படம் எந்த மதத்தை அல்லது ஆத்திக நாத்திகர்களைப் பற்றிய படமல்ல, அது மக்களைப் பற்றிய படம், என்கிறார் கமல் ஹாஸன்.

கமலின் அடுத்த படமான ‘உத்தம வில்லன்' திரைப்படத்தை தடைசெய்ய வேண்டும், கமலை கைது செய்ய வேண்டும் என்றெல்லாம் சிலர் பரபரப்பு கிளப்பி வருகின்றனர்.

உத்தம வில்லன் மக்களைப் பற்றிய படம்.. மதங்களைப் பற்றியதல்ல! - கமல்

இது குறித்து கமல் அளித்துள்ள பதில்:

"இந்த எதிர்ப்பு உருவாக ‘எனது நாத்திக கொள்கைகள்தான் காரணமாக உள்ளது. அவரவர்களுக்கு ஒரு வாழ்க்கை முறை இருப்பதுபோல் எனது வாழ்க்கை முறை நாத்திகமாக உள்ளது. அவ்வளவுதான். இதைப் புரிந்து கொண்டால் பிரச்சினை இல்ல.

எனது பெற்றோர் இந்துக்களாகவும், வைணவர்களாகவும் அறியப்பட்டவர்கள். நான் எப்படி இந்த மக்களை வெறுக்க முடியும்? எனது ரசிகர்களை நான் இழக்க விரும்புவதாக பிறர் நினைப்பது, அவர்களின் அறியாமை என்றுதான் கருத வேண்டும்.

'உத்தம வில்லன்' படம் இந்துக்களான ஆத்திகர்களைப் பற்றியதோ, நாத்திகர்களைப் பற்றியதோ அல்ல; மக்களைப் பற்றியப் படம். எனவே, அனைத்து தரப்பு மக்களும் எனது படத்தை பார்க்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்."

 

Post a Comment