நகைச்சுவைையை தொடர்ந்து கவுரவிக்கும் சத்யபாமா பல்கலைக் கழகம்

|

சின்னக் கலைவாணர் என அழைக்கப்படும் நடிகர் விவேக்குக்கு சத்யபாமா பல்கலைக் கழகம் கவுரவ டாக்டர் பட்டம் அளித்துள்ளது.

இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக நகைச்சுவைக் கலைஞர்களை கவிரவித்துள்ளது இந்த பல்கலைக் கழகம்.

விவேக்குக்கு முன் நடிகை மனோரமாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது சத்யபாமா பல்கலை.

Vivek gets honorary Doctorate

திரைப்படங்களில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களுடன் காமெடி செய்து வருபவர் விவேக். சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் இவரது நகைச்சுவைக்கு பெரும் வரவேற்பு உண்டு.

கடவுள் பக்தி உள்ளவர் என்றாலும், மூட நம்பிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து திரையில் பிரச்சாரமே செய்து வருபவர் விவேக் என்றால் மிகையல்ல. சாமி, திருநெல்வேலி, காதல் சடுகுடு, தூள் போன்ற படங்களில் இவரது நகைச்சுவை அத்தனை சிறப்பாக இருக்கும்.

அதேபோல, உத்தம புத்திரன், வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் விவேக்கின் நகைச்சுவை வயிறு குலுங்க வைத்தவை.

தமிழ் திரைப்படத் துறையில் இவரது பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு ‘பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவித்தது.

நடிப்பு மட்டுமின்றி சமூக சேவைகளிலும் நாட்டம் கொண்டவர். தற்போது தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி மரக் கன்றுகள் நடும் திட்டத்தை கையிலெடுத்து முன்னின்று நடத்தி வருகிறார்.

சுமார் 25 ஆண்டுக்ளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான நகைச்சுவையைத் தந்து வரும் கலைஞனான விவேக்கைப் பாராட்டி சத்யபாமா பல்கலைக்கழகம் ‘டாக்டர்' பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

ஏற்கெனவே, இயக்குநர் கே பாலச்சந்தர், நடிகர் கமல் ஹாஸன் உள்ளிட்டோருக்கும் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது சத்யபாமா பல்கலைக்கழகம்.

நகைச்சுவை நடிகர்களுக்கு வேறு எந்த பல்கலைக் கழகத்திலும் இதுபோன்ற கவுரவ டாக்டர் பட்டங்கள் அளிக்கப்படவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment