புலிமுருகன்... இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் மோகன்லால் - பிரபு

|

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள் மோகன்லாலும் பிரபுவும்.

1996-ம் ஆண்டு காலாபாணி (சிறைச்சாலை) படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அதன் பிறகு வேறு படங்களில் இணையவில்லை.

புலிமுருகன்... இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் மோகன்லால் - பிரபு

இப்போது நடிக்கும் புதிய படத்துக்கு புலிமுருகன் என தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் புலிமுருகனாக மோகன்லால் நடிக்க, அவருக்கு இணையான வேடத்தில் பிரபு நடிக்கிறார். வைசாக் இந்தப் படத்தை இயக்குகிறார். உதயகிருஷ்ணா படத்தின் திரைக்கதை வசனத்தை எழுதுகிறார்.

மே மாதம் படம் தொடங்கவிருக்கிறது. இதுகுறித்து இயக்குநர் வைசாக் கூறுகையில், "மோகன்லாலை இந்தப் படத்தில் மிக மாறுபட்ட வேடத்தில் பார்க்கலாம். முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக எடுக்கப் போகிறோம்," என்றார்.

சண்டைக் காட்சிகள் அதிகம் என்பதால் பீட்டர் ஹெய்னை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம்.

 

Post a Comment