கத்ரீனாவுக்கு மெழுகுச் சிலை: சோனாக்ஷி சின்ஹா என்ன ஃபீல் பண்ணுகிறார்?

|

மும்பை: லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பாலிவுட் நடிகை கத்ரீனா கைபுக்கு மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளதை நினைத்து தான் மகிழ்ச்சி அடைவதாக நடிகை சோனாக்ஷி சின்ஹா தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பல பிரபலங்களின் மெழுகுச் சிலைகள் உள்ளன. இந்நிலையில் அந்த அருங்காட்சியகத்தில் பாலிவுட் நடிகை கத்ரீனா கைபுக்கு மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை கத்ரீனா கைப் திறந்து வைத்தார்.

கத்ரீனாவுக்கு மெழுகுச் சிலை: சோனாக்ஷி சின்ஹா என்ன ஃபீல் பண்ணுகிறார்?

கத்ரீனாவுக்கு சிலை வைக்கப்பட்டது பற்றி செய்தியாளர்கள் நடிகை சோனாக்ஷி சின்ஹாவிடம் கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில்,

கத்ரீனாவின் மெழுகுச் சிலையை நான் நேரில் பார்க்கவில்லை. உங்களைப் போன்று புகைப்படத்தில் தான் பார்த்தேன். சிலை மிகவும் அருமையாக உள்ளது. அவர் திரைத் துறையில் பல ஆண்டுகளாக இருந்து இந்த நிலையை அடைந்துள்ளார். நான் கத்ரீனாவுக்காக மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

உங்களுக்கும் மேடம் டுசாட்ஸில் மெழுகுச் சிலை வைக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, எனக்கும் ஒரு நாள் சிலை வைப்பார்கள் என்று நம்புகிறேன். இன்ஷா அல்லாஹ் என்றார் சோனாக்ஷி.

 

Post a Comment