வாடி ராசாத்தி... புதுசா... இளசா... ரவுசாப் போவோம்... !

|

சென்னை: திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த நடிகை ஜோதிகா தற்போது 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் திரும்பி வந்துள்ளார்.

ஜோதிகாவைப் போலவே திருமணத்தால் நீண்ட காலத்திற்குப் பிறகு மலையாளப் பட உலகிற்கு திரும்பி வந்த மஞ்சு வாரியாருக்கு நல்ல ஓப்பனிங் கொடுத்தது ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ' படம். அப்படத்தின் தமிழ் ரீமேக் தான் 36 வயதினிலே.

வாடி ராசாத்தி... புதுசா... இளசா... ரவுசாப் போவோம்... !

இப்படத்தை ஜோதிகாவின் கணவரும், நடிகருமான சூர்யாவே தயாரிக்கிறார். இப்படத்தில் ஜோதிகாவிற்கு ஜோடியாக ரகுமான் நடிக்கிறார்.

மலையாளத்தில் இந்தப் படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸே தமிழிலும் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பெண்களை மையப்படுத்தி படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு முடிந்து படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது அப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் வரிகளைக் கேட்கும் போதே, படத்தில் ஜோதிகாவின் கதாபாத்திரம் புரட்சிகரமாக இருக்கப் போகிறது என்பது சொல்லாமலேயே புரிகிறது.

இதோ அப்பாடலின் வரிகள் உங்களுக்காக....

வாடி ராசாத்தி... புதுசா... இளசா... ரவுசாப் போவோம்

வாடி வாலாட்டி... வரியா... புலியா... தனியா திரிவோம்...

ஊரே யாருனு கேட்டா... உம்பேர மைக்கு செட்டு போட்டு உறுமிக் காட்டு...

காட்டு... காட்டு... காட்டு... காட்டு...

தங்கமுனு ஊரு உன்ன மேல தூக்கி வைக்கும்...

திண்டுக்கல்லு பூட்டு ரெண்டு மாட்டி பூட்டி வைக்கும்...

விட்டு வாடி ராசாத்தி... உன்ன நீயே காப்பாத்தி...

ராசாத்தி.. ராசாத்தி... ராசாத்தி...

நீ வாடி ராசாத்தி... அட வாடி ராசாத்தி...

பொட்டப்புள்ள போக உலகம் பாதை போட்டு வைக்கும்...

முட்டுச்சந்து பாத்து அந்த ரோடு போயி நிக்கும்...

படங்காட்டும் ஏமாத்தி... கலங்காத ராசாத்தி...

ராசாத்தி... ராசாத்தி... ராசாத்தி...

நீ வாடி ராசாத்தி... அட வாடி ராசாத்தி...

இவ்வாறு அந்தப் பாடல் முடிகிறது.

உண்மையிலேயே ராசாத்தியாகத் தான் இப்பாடலில் வலம் வருகிறார் ஜோதிகா.

இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் 6ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment