நடிகர் விஜய் தன் பிறந்த நாள், படங்கள் வெளியாகும் நாள், வெற்றி விழா சமயங்களில் ரசிகர்களுக்கு உதவிகள் செய்வார். சில நேரங்களில் மாவட்டத் தலைநகர்களில் ரசிகர் மன்றங்கள் மூலம் உதவிகள் செய்வதும் உண்டு.
குறிப்பாக மாணவர்களுக்கு கல்வி உதவிகளை அதிகம் வழங்கி வருகிறார்.
ஏழை ரசிகர்கள் தொழில் தொடங்கவும் உதவுகிறார். அந்த வகையில் சமீபத்தில் மூன்று ரசிகர்களுக்கு தள்ளு வண்டிகள் கொடுத்து சுய தொழிலுக்கு உதவியுள்ளார்.
அயனாவரத்தைச் சேர்ந்த ராஜேஷ், அண்ணா நகர் வளைவு அருகே வாடகை தள்ளுவண்டியில் சாப்பாட்டுக்கடை நடத்தி வந்தார். அவருக்கு சொந்தமாக ஒரு வண்டியை வாங்கிக் கொடுத்துள்ளார் விஜய்.
கிழக்கு தாம்பரம் கணபதிபுரத்தில் உள்ள லட்சுமி நகரில் டிபன் கடை, இஸ்திரி கடையை ஞானம் பிரகாசமும் அவருடைய மகன் லூர்துசாமியும் வாடகை வண்டியில் நடத்தி வந்தார்கள்.
அவர்களுக்கு சாப்பாட்டுக் கடை வண்டி மற்றும் இஸ்திரி போடும் வண்டி வாங்கிக் கொடுத்துள்ளார் விஜய். திருமதி.ஞானம்பிரகாசம் மகனுடன் விஜய்யை சந்தித்து நன்றி தெரிவித்து, அவரிடமிருந்து வண்டியை பெற்றுச் சென்றனர்.
நீலாங்கரை பகுதியிலுள்ள முருகன் என்பவர் பழம், இளநீர் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அவர் வண்டி பழுதடைந்து விட்டதால் வியாபாரம் செய்ய முடியாமல் கஷ்டத்திலிருந்தார்.
ரசிகர் மன்றம் மூலம் இதனைக் கேள்ழிப்பட்ட விஜய், உடனடியாக வியாபாரம் செய்ய தேவையான மூன்று சக்கர வண்டியை தன் சொந்த செலவில் வாங்கி கொடுத்தார்.
Post a Comment