சென்னை: விஜய் நடித்து வரும் புலி படம் ரூ. 118 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் எடுக்கப்படுகிறதாம்.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புலி படம் பற்றி தான் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். படத்தில் ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா என இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும் ஸ்ருதிக்கு அதிக முக்கியத்துவம் என்று கூறப்படுகிறது.
ஹன்சிகா பாவம் ஒருதலையாக விஜய்யை காதலித்துவிட்டு செல்வாராம். புலி படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திர மாநிலம் தலைக்கோணம் பகுதியில் நடந்து வருகிறது. படக்குழுவினர் அடர்ந்த காட்டுப் பகுதியில் காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.
இந்நிலையில் படத்தின் பட்ஜெட் பற்றி தெரிய வந்துள்ளது. ரூ.118 கோடிக்கும் மேல் செலவு செய்து படத்தை எடுக்கிறார்கள். புலியை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
ஸ்ருதி, ஹன்சிகா ஆகிய இருவருக்கும் தமிழ் தவிர தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment