இது சின்னத்திரை திரைமறைவுகள்... கம்முன்னு படிங்க!....

|

சினிமா நட்சத்திரங்களைப் பற்றி கிசு கிசு போட்டாத்தான் படிப்பீங்களா? சினிமாவைப் போலவே சின்னத்திரையும் பரந்து விரிந்து இல்லத்தரசிகளின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கிறது.

எங்களைப் பற்றியும் கொஞ்சம் எழுதுங்களேன்... என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க புதிய பகுதியாக வருகிறது கம்முன்னு படிங்க...

சித்தீ.... நிஜமா?

சினிமா நட்சத்திரங்கள் சந்திப்பு நிகழ்ச்சியை டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்புவது பிடிக்காமல் தான் உச்ச நடிகரும்... உலக நாயகன் நடிகரும் இந்த வருட நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லையாம்.

இது ஒருபுறம் இருக்க நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஐஸ்வர்யமான தொகுப்பாளினிக்கு பேசிய சம்பளத்தை கொடுக்கவில்லையாம் சித்தி.

நிகழ்ச்சியை சரியாக செய்யவில்லை என்று சித்தி புகார் வாசிக்க... தொகுப்பாளினியோ, தனக்கு சரியான முறையில் புரோகிராம் சார்ட் கொடுக்கவில்லை என்று சித்தி மீது புகார் வாசிக்கிறார்.

இதில் எது நிஜம்?... யாராவது சொல்லுங்களேன்!

நம்பரும் திருமணமும்

விலை பேசப்படும் நம்பர் நடிகையின் திருமணம் அந்த தொலைக்காட்சி சேனலில் நம்பர் நடிகையின் திருமணத்தை எக்ஸ்க்ளூசிவ் ஆக கவர் பண்ண பேச்சு நடக்கிறதாம். இப்படித்தான் சினேகமான நடிகையின் திருமணத்தை வெற்றிச்சேனல் பதிவு பண்ணி ஒளிபரப்பியது. அதன் காரணமாகவே பல பிரபலங்கள் இந்த சினேக நடிகையின் திருமணத்திற்கு போகாமல் தவிர்த்தனர். தற்போது மூனுஷா நடிகையின் திருமணத்தையும் எக்ஸ்க்ளூசிவ் ஆக ஒளிபரப்ப திட்டமிடுகிறதாம். யார் யார் போகாமல் எஸ்கேப் ஆகப்போகிறார்களோ தெரியலையே?

அத அட விடுங்க... முதல்ல நம்பர் என்னைக்கு கல்யாணம் பண்ணப்போறங்கன்னு தேதி தெரியுமா? அதெல்லாம் சொல்லமாட்டோம் என்கிறது கோடம்பாக்கத்து பச்சி...

நாட்டாம ஆள மாத்து....

எதைச் சொன்னாலும் உண்மை என்று கூவும் நடிகை தற்போது மூன்றாவது படத்தை இயக்கி நடிப்பதால் நிகழ்ச்சியை சரியாக நடத்தாமல் இழுத்தடிக்கிறாம். இதனால் தொகுப்பாளினியை மாற்ற முடிவெடுத்துள்ளனராம்.

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியை நடத்திய வணணணணக்கம் தொகுப்பாளினி பண்ணிய இம்சையினால்தான் இவரை அழைத்து வந்தனர். இப்போது புதிதாக வேறு ஆளை எங்கே போய் தேடுவது யோசிக்கின்றதாம் சேனல் தரப்பு....

என்னாம்மா இப்படி பண்றீங்களேம்மா?

காம்பயர் பண்ணு... காச அள்ளு

ஏப்பா வேலை போயுருமே?....

யாருக்கு தெரியும் போக வாய்ப்பு இருக்கு...

வேற என்ன செய்ய?

டிவியில காம்பயர் பண்ணி பொழச்சுக்கலாம்... இது பிரபல படத்தின் வசனம். இந்த வசனம் பேசிய இருவருமே டிவியில் தொகுப்பாளர்கள் வேலை செய்து சினிமாவில் பிரபலமானவர்கள்தான்.

இன்றைக்கு சேனல்களில் தொகுப்பாளர்கள், தொகுப்பாளினிகளாக வலம் வருபவர்கள் சினிமாவிற்கு நடிக்கச் சென்றுவிடுகின்றனர். எனவே தொகுப்பாளர் பணிக்கு போட்டி போட்டுக்கொண்டு அப்ளை செய்கின்றனர். எனவே முன்னணி சேனல்களில் தொகுப்பாளர்களாக வாய்ப்பு பெற்றுத்தர பல லட்சங்கள் வரை இடைத்தரகர்களால் பேரம் பேசப்படுகிறதாம்.

 

Post a Comment