அப்பா பேரு கஸ்தூரி ராசா.. மகன் தனுஷ் ஒரு "டீக்கடை ராசா"!

|

சென்னை: வேலையில்லாப் பட்டதாரி படத்தைத் தொடர்ந்து வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு ‘டீக்கடை ராசா' எனப் பெயர் வைக்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

அனேகன், ஷமிதாப் என இந்தாண்டுத் துவக்கமே தனுஷிற்கு வெற்றி முகமாகத் தான் இருந்தது. அதனைத் தொடர்ந்து மிகக் குறுகிய காலத்தில் மாரி படப்பிடிப்பும் முடிந்து விட்டது.

அப்பா பேரு கஸ்தூரி ராசா.. மகன் தனுஷ் ஒரு

தற்போது தனுஷ் வேல்ராஜ் இயக்கத்தில் படமொன்றில் நடித்து வருகிறார். ஏற்கனவே தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி வெற்றிப் படத்தைத் தந்தவர் வேல்ராஜ் என்பதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். தனுஷின் வுண்டார்பார் தயாரிக்கிறது.

இந்தப் படத்திற்கு டீக்கடை ராஜா எனப் பெயர் வைக்க முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வேலையில்லா பட்டதாரி படத்தில் வரும் பாடலின் ஒரு வரியில், ‘டீக்கடை ராஜா நாங்க' என வரும். அதில் இருந்தே இந்தப் படத்தலைப்பு எடுக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

ஒருவேளை இந்தத் தலைப்பு படத்திற்கு வைக்கப் பட்டால், நிச்சயம் 30 சதவீத வரிச்சலுகைக் கிடைக்காது. ஏனெனில் தலைப்பில் வரும் டீ ஆங்கில வார்த்தை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment