பத்து ஆண்டுகளுக்கு முன் தமிழ் ரசிகர்களையெல்லாம் தன் இடுப்பாட்டத்தில் கிறங்கடித்த சிம்ரன் இப்போது இயக்குநர் - தயாரிப்பாளர் அவதாரமெடுத்துள்ளார்.
அதற்காக நடிப்பதை நிறுத்தவில்லை அவர். இப்போதும் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் நடித்துக் கொண்டுதான் உள்ளார் அவர்.
நடிப்பு ஒரு பக்கம்.. மறுபக்கம் திரைப்பட தயாரிப்பு மற்றும் இயக்கம் என முடிவெடுத்துள்ள அவர், ‘சிம்ரன் அண்ட் சன்ஸ்' என்ற பெயரில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, அதன் லோகோவையும் தற்போது வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து சிம்ரன் கூறும்போது, "எனது சினிமா ஆர்வம் என் வாழ்வில் பெரும் முக்கிய இடத்தை கொண்டது. என் கணவர் தீபக் உடன் இணைந்து ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்க அதுவே காரணமாக இருந்தது.
நான் நடிகையாக இருந்த அனுபவமும், எனது சின்னத்திரை நிகழ்ச்சிகளை தயாரித்த அனுபவமும் இந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் எண்ணத்திற்கு உறு துணையாய் இருந்தது. எனது இந்த முயற்சிக்கு பெரிதும் உதவியாக இருந்த அனைவருக்கும் எனது நன்றிகள்.
இந்த வருடம் இரண்டு படங்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். இரு வித்தியாசமான வித்தியாசமான கதைக் களத்தை உடையதாய் இருக்கும் அந்தப் படங்கள். எனது முயற்சிகளுக்கு எப்போதுமே ரசிகர்கள் ஆதரவுண்டு. தயாரிப்பாளர், இயக்குனர் என்ற எனது இந்த முயற்சியையும் அனைவரும் ஆதரிக்கும் வேண்டும்," என்றார்.
Post a Comment