சென்னை: ‘வயசு ஏற ஏற உன் அழகும், ஸ்டைலும் கூடிட்டே போகுது'னு நீலாம்பரி சொன்ன டயலாக் சூப்பருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, பெரிய நம்பர் நடிகைக்கு கச்சிதமாகவேப் பொருந்துகிறது.
வயது குறைந்த புதிய நடிகைகள் பலர் அறிமுகம் ஆனபோதும், தொடர்ந்து பல நடிகர்களின் முதல் சாய்ஸ் பெரிய நம்பர் நடிகை தான். காரணம் அவரது அழகு மட்டுமல்ல. உடன் நடிக்கும் நடிகர்களுடன் திரையில் அழகான கெமிஸ்ட்ரி வர வைத்து விடுவது தான்.
அதனால் தான் தொடர்ந்து தமிழில் நிலையான இடத்தைப் பிடித்து வைத்திருக்கிறார் நடிகை. இந்நிலையில், சமீப காலமாக நடிகை தனது பழைய தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகளுடன் நட்பு பாராட்டத் தொடங்கியுள்ளார்.
காரணம் என்னவென்று விசாரித்தால், அம்மணி தமிழ்நாட்டு மருமகளாகப் போகிறாராம். ஏற்கனவே, டான்ஸ், விரல் என இரண்டு நடிகர்களுடன் காதல் தோல்வி அடைந்தது. இந்நிலையில், பூ நடிகையைப் போல, இவரும் தமிழக மருமகள் ஆகும் திட்டத்தில் நடிகை இருக்கிறார்.
எனவே, பழைய காதலைத் தூசு தட்டப் போகிறாரா இல்லை புதிய காதலா என்பது தான் தற்போது மில்லியன் டாலர் கேள்வி. காலம் தான் பதில் சொல்லணும்...அதுவரைக்கும் பத்துக்குள்ள நம்பர் ஒன்னு சொல்லு.. உன் நெஞ்சுக்குள்ள யார் என்று சொல்வேன் என்று நாம் பாட்டுப் பாடிக் கொண்டிருப்போம்!
Post a Comment