சென்னை: சின்ன நம்பர் நடிகையின் திருமணத் தேதி அடுத்த ஆண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சின்ன நம்பர் நடிகைக்கும், தெலுங்கு நடிகர் ஒருவருக்கும் தான் காதல் என்று பல ஆண்டுகளாக பேசப்பட்டது. ஆனால் அவர்கள் காதல் முறிந்த வேகத்தில் நடிகைக்கும், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இதையடுத்து நடிகைக்கும், அந்த தொழில் அதிபருக்கும் சென்னையில் வைத்து திருமண நிச்சயதார்த்தம் சிறப்பாக நடத்தப்பட்டது. நிச்சயம் முடிந்த கையோடு நடிகை படங்களில் நடிக்க சென்றுவிட்டார். முதலில் அவருக்கு திருமணம் என்ற செய்தி பரவியபோது அவரை புதுப்படங்களில் ஒப்பந்தம் செய்ய பலர் தயங்கினர்.
நிச்சயதார்த்தம் முடிந்த பிறகோ அவரை தேடி பட வாய்ப்புகள் வந்து குவிகிறது. அதிலும் அவர் விரும்பிய பேய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வேறு வந்துள்ளது. நடிகையும் சந்தோஷமாக தன்னை தேடி வரும் வாய்ப்புகளை ஒப்புக் கொள்கிறார்.
மார்க்கெட் சூடுபிடித்துள்ளதால் திருமணம் பற்றிய பேச்சுக்கு தற்போதைக்கு இடமில்லை என்று தெரிவித்துள்ளாராம் நடிகை. அவரது திருமணம் இந்த ஆண்டு நடக்கும் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது திருமணம் அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.
Post a Comment