நேபாள நிலநடுக்கம்... நடிகர் விஜய் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கினார்!

|

சென்னை: நிலநடுக்கத்தால் பாதிக்கப் பட்டுள்ள நேபாளத்திற்கு நடிகர் விஜய், ரூ. 10 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளார்.

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை குழந்தைகளின் படிப்பு செலவு, மாணவ, மாணவியருக்கு இலவச புத்தகங்கள், இலவச கம்யூட்டர் பயிற்சி மையங்கள் என பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

Actor Vijay gave rs. 10 lakh worth relief things to Nepal

இந்நிலையில், கடந்த மாதம் ஏற்பட்ட பூகம்பத்தால் உருக்குலைந்து போன நேபாளத்திற்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான மருந்து மற்றும் துணிமணிகளை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அனுப்ப நடிகர் விஜய் முடிவு செய்தார். அதன்படி விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான இந்த பொருட்கள் அனைத்தும் இன்று நேபாளத்துக்கு அனுப்பப்பட்டது.

கஷ்டப்படுபவர்களுக்கு உதவிடும் வகையில், சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாகச் செயல்படுவதாக விஜய்க்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

 

Post a Comment