சூர்யா நடித்துள்ள மாசு என்கிற மாசிலாமணி படம் நாளை உலகெங்கும் வெளியாகிறது.
சூர்யா நடித்த படங்களிலேயே அதிக அரங்குகளில் வெளியாகும் படம் என்ற அறிவிப்புடன் இந்தப் படம் வெளியாகவிருக்கிறது.
இந்தியா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளிலும் சேர்த்து 1900 அரங்குகளில் மாசு படத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இவற்றில் தமிழகத்தில் மட்டும் 425 அரங்குகளில் படம் வெளியாகிறது. ஆந்திரா - தெலங்கானாவில் 570 அரங்குகளிலும், கேரளாவில் 142 அரங்குகளிலும் இந்தப் படம் வெளியாகிறது.
கர்நாடகத்தில் 100 அரங்குகள், இந்தியாவின் பிற பகுதிகளில் 140 அரங்குகள் இந்தப் படத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
உலகின் பிற பகுதிகளில் 700 அரங்குகளில் மாசு வெளியாகும் என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment