நியூயார்க்: டிசம்பர் மாதம் வெளியாகவுள்ள ஸ்டார் வார்ஸ் திரைப்பட 7வது பாகத்தின் டிரெய்லர் யூடியூபில் சக்கைப் போடு போட்டு வருகின்றது.
1980 களில் ஹாலிவுட்டையே புரட்டிப் போட்ட திரைப்படம் ஸ்டார் வார்ஸ். தலைமுறைகளைக் கடந்து ரசிகர்களைப் பெற்றுள்ள ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் 6 பாகங்கள் இது வரை வெளியாகியுள்ளன.
தற்போது "ஸ்டார் வார்ஸ் தி போர்ஸ் அவேகன்ஸ்" என்ற பெயரில் 7வது பாகம் தயாராகி வருகிறது. ஜே.ஜே. ஆப்ராம்ஸ் இயக்கியுள்ள இந்தப் படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
வேற்று கிரகம் என்ற ஒரு விஷயத்தை வைத்துக் கொண்டு ஒவ்வொரு பாகத்திலும் ஸ்டார் வார்ஸ் போகும் உயரம் ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தி வருகிறது.
"அவெஞ்சர்ஸ்" படத்தின் பாக்ஸ் ஆபிஸ் சண்டைகள் ஓய்ந்த நிலையில் பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி தனது "ஸ்டார் வார்ஸ்" படத்தினை போகஸ் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்டார் வார்ஸ் படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளில் தீவிரமாக உள்ளது.
இது குறித்து டிஸ்னி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாப் இகர் கூறுகையில் "ஸ்டார் வார்ஸ் தி போர்ஸ் அவேகன்ஸ் படத்தின் 2வது டீசரை இதுவரை 20 கோடி பேர் பார்த்துள்ளனர்.
சமீபத்தில் வெளியாகியுள்ள படத்தின் டிரெய்லரை வெளியான 24 மணி நேரத்திற்குள் 88 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். ரசிகர்களின் அமோகமான ஆதரவுக்கு நன்றி" என்றார்.
Post a Comment