குடிபோதையில் கார் ஓட்டிய வழக்கில் சல்மான் கான் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள நிலையில், அவரை நம்பி ரூ 200 கோடியை இரண்டு படங்களில் முதலீடு செய்துள்ள தயாரிப்பாளர்களின் நிலை கேள்விக் குறியாகியுள்ளது.
தற்போது நடிகர் சல்மான்கான் ‘பஜ்ரங்கி பாய்ஜான்' என்ற படத்தில் நடிகை கரீனா கபூருடனும். ‘பிரேம் ரத்தன் தான் பாயோ' என்ற படத்தில் சோனம் கபூருடனும் நடித்து வந்தார்.
இந்த இரு படங்களிலும் ரூ. 200 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த படங்களின் படப்பிடிப்புகளும் இறுதி கட்டத்தில் உள்ளன. தண்டனை வழங்கப்பட்டதால் இந்த 2 படங்களும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே பஜ்ரங்கி பாய்ஜான் படத்தைத் தயாரித்த ஈராஸ் நிறுவனப் பங்குகள் விலை இன்றைய தீர்ப்புக்குப் பிறகு கடும் சரிவைச் சந்தித்து நஷ்டத்தை ஏற்படுத்தியது. சல்மான் ஜெயிலுக்குப் போய்விட்டால், இந்த இரு படங்களையுமே முடித்துக் கொடுக்க முடியாமல் போய்விடும்.
Post a Comment