சென்னை: தல அஜித்தின் 55 வது படமான என்னை அறிந்தால் கடந்த பிப்ரவரி மாதம் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது அல்லவா. தற்போது அதன் தெலுங்கு பதிப்பு இந்த மாதம் (மே) 22 ம் தேதி ஆந்திர மண்ணில் வெளியாகிறது.
அஜித், அருண் விஜய், அனுஷ்கா மற்றும் த்ரிஷா, நாசர் ஆகியோர் நடித்து இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு தெலுங்கில் வெளியாக இருக்கிறது.
அக்கரை சீமையில் அஜித்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. மங்காத்தா, ஆரம்பம் போன்ற படங்கள் ஆந்திராவில் வெளியாகி வசூலை அள்ளிய நிலையில் கடைசியாக வெளிவந்த வீரம் மகேஷ் பாபு படத்துடன் மோதியதால் வசூலை இழந்தது.
தற்போது ஆந்திராவில் எந்த பெரிய படங்களும் வெளியாகாத நிலையில் என்னை அறிந்தால் படம் வெளியிடப்படுவதால் படம் வசூலில் சாதனை படைக்கும் என படக் குழுவினர் நம்புகின்றனர்.
என்னை அறிந்தால் தெலுங்கில் எடுபடுமா.. பார்க்கலாம்
Post a Comment