ஹலோ.. நான் +2வில் பெயிலெல்லாம் கிடையாது....லட்சுமி மேனன்!

|

சென்னை: பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்ததாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகை லட்சுமி மேனன்.

கேரளாவைச் சேர்ந்த நடிகை லட்சுமிமேனன், கொச்சியில் உள்ள பாரதிய வித்யா மந்திர் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். சமீபத்தில் அதற்கான தேர்வு எழுதினார்.

 Laxmi menon refuses her plus2 result gossips

பிளஸ் 2 தேர்வில் லட்சுமிமேனன் பெயில் ஆகிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் வியாழக்கிழமை தகவல்கள் பரவின. அதற்கு லட்சுமிமேனன் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது, "நான் மெட்ரிக்குலேஷன் பாடத்திட்டத்தில் படிக்கவில்லை. சி.பி.எஸ்.இயில் படித்தேன். சி.பி.எஸ்.இயில் தான் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதினேன். அந்த தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. 20 ஆம் தேதிக்குமேல்தான் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறுகிறார்கள்.

நான் பிளஸ் 2 தேர்வில் "பெயில்" ஆனதாக வெளியான தகவல் தவறானது. அதை யாரும் நம்பவேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.

 

Post a Comment