36 வயதினிலே படத்தை எடுத்ததற்காக நான் பெருமைப் படுகிறேன் என்று நடிகர் சூர்யா தெரிவித்தார்.
சூர்யாவின் மனைவி ஜோதிகா சினிமாவில் மறுபிரவேசம் செய்துள்ள படம் 36 வயதினிலே. கடந்த வாரம் வெளியாகி, பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
இந்தப் படத்துக்கு விமர்சகர்கள் மத்தியிலும் சாதகமான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.
இதனால் மிகவும் மகிழ்ந்து போன சூர்யா, "36 வயதினிலே படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு என்னை நெகிழ வைக்கிறது.
பொதுமக்கள், ரசிகர்கள் மற்றும் மதிப்புக்குரிய மீடியாவுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் எனக்கு எப்போதும் இருந்து வந்தது. அதன் விளைவுதான் 36 வயதினிலே. இந்த மாதிரி முயற்சிகளைத் தொடர்வேன், என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஜோதிகாவும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
Post a Comment