சல்மானுக்கு 5 ஆண்டு சிறை: பூனம் பாண்டே என்ன சொல்கிறார்?

|

மும்பை: சல்மான் வழக்கின் தீர்ப்பு குறித்து தான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று நடிகை பூனம் பாண்டே தெரிவித்துள்ளார்.

2002ம் ஆண்டு குடிபோதையில் காரை ஓட்டி சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது ஏற்றி ஒருவரை கொன்ற வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் சல்மானுக்கு சிறை தண்டனை கிடைத்துள்ளதை அறிந்து அவரது ரசிகர்களும், பாலிவுட் பிரபலங்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிலர் சல்மானுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பாலிவுட் நடிகையும், மாடலுமான பூனம் பாண்டே ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

நீதிமன்ற தீர்ப்பு பற்றி நான் கருத்து தெரிவிக்க மாட்டேன். அன்பான மனிதரான சல்மான் கானுக்காக நான் அனுதாபப்படுகிறேன். ஆனால் யாரும் சட்டத்திற்கு மேல் ஆனவர்கள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

 

Post a Comment