பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் புதிய படம் இந்த மாத இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறது.
படத்தை பொங்கலுக்கு வெளியிடப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
ரஜினி - ரஞ்சித் - தாணு புதிய படம் குறித்துதான் திரையுலகிலும் மீடியா உலகிலும் நேற்று இரவு முதல் பரபரப்பான பேச்சாக உள்ளது.
ஆரம்பத்தில் இந்த செய்தியை சந்தேகமாகவே பார்த்தவர்கள், பின்னர் சம்பந்தப்பட்டவர்களிடம் உறுதிப்படுத்திக் கொண்டு உற்சாகமாகப் பகிர்ந்து வருகின்றனர்.
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, எழுபதுகளிலிருந்தே ரஜினியுடன் பயணம் செய்பவர். ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் சூட்டி, அதை பிரமாண்ட கட் அவுட்டகளாக வைத்தவர். கூலிக்காரன் படப்பிடிப்பைத் தொடங்கி வைக்க வந்த ரஜினியை வியக்க வைக்கும் அளவு மெகா கட் அவுட் வைத்தவர்.
சந்திரமுகி, குசேலன் போன்ற படங்களைத் தயாரிக்கும் வாய்ப்பு அமைந்தும், சிவாஜி குடும்பம் மற்றும் பாலச்சந்தருக்காக அவற்றை விட்டுக் கொடுத்தார்.
இப்போதுதான் அவருக்கு ரஜினியை வைத்து படம் தயாரிக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.
இந்தப் படத்தை இந்த மாத இறுதியில் அல்லது, அடுத்த மாத முதல் வாரத்தில் ஆரம்பிக்கப் போவதாகக் கூறப்படுகிறது. ஆனால் நிச்சயம் பொங்கலுக்கு படத்தை வெளியிடுவதில் உறுதியாக உள்ளார்களாம்.
ரஜினி - ரஞ்சித் - தாணு பட அறிவிப்பை ரசிகர்கள் சமூக வலைத் தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
Post a Comment