“பர்மிய முஸ்லிம்களை காப்பாற்றுவோம்” – பேஸ்புக்கில் ஆதரவு தரும் நடிகர் விஜய் சேதுபதி

|

சென்னை: மியான்மரில் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் மக்களுக்காக நடிகர் விஜய் சேதுபது தன்னுடைய சமூக வலைதளப் பக்கமான பேஸ்புக் மூலமாக ஆதரவு தெரிவித்துள்ளார்.

பல்லாண்டு காலமாக பர்மாவில் வாழும் ரோஹிங்யா முஸ்லிம் சிறுபான்மையினர் "மியன்மாரை சேந்தவர்கள் அல்ல" என்ற கருத்து பரப்பப்பட்டு பர்மா என்றழைக்கப்பட்ட மியான்மரில் அவர்கள் வெளியேற்றும் வகையில் அவ்வப்போது இனக்கலவரங்கள் நடைபெற்று வருகிறது.

இதனால் ரோஹிங்கியா முஸ்லிம் சிறுபான்மையினர் இந்த வன்முறைகளில் பெரும்பான்மையாகப் பாதிக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டார்கள். இனவாத புத்த பிக்குகள் தலைமையில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன‌.

Vijay sethupathi supports Myanmar Muslims in FB

புத்த இனவாத குழுக்களுக்கு அஞ்சி மியான்மரிலிருந்து ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் கடல் வழியாக படகுகளில் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.

சமீபத்தில் படகுகளில் நாட்டை விட்டு தப்பி வந்த நூற்றுக்கணக்கானோரை அண்டை நாடுகள் தங்களின் நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்ததால் நடுகடலில் தத்தளித்தனர்.

இதனால் இப்பிரச்சனை உலக அரங்கின் கவனத்தை ஈர்த்து தற்போது பாதிக்கப்பட்ட ரோஹிங்கிய‌ மக்களுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் கண்டன குரல்கள் எழும்ப தொடங்கியுள்ளன.

இந்நிலையில் நிலையில் தமிழகத்தின் பிரபல நடிகர் விஜய் சேதுபதி "பர்மாவில் அப்பாவி முஸ்லிம் மக்களைக் கொல்வதை நிறுத்துங்கள்" என பேஸ்புக் மூலம் ஆதரவு குரல் எழுப்பியுள்ளார்.

 

Post a Comment