ஜிகர்தண்டா படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்ய இடைக்கால தடை

|

சென்னை: வரும் ஜூன் இரண்டாம் வாரம் வரை கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா படத்தின் பிற மொழி உரிமைகளை விற்கவோ, ரீமேக் செய்யவே சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

Interim stay to remake Jigarthanda in any language

'ஜிகர்தண்டா 'திரைப்படத்தின் இந்தி மொழிமாற்று உரிமையையொட்டி எழும் பிரச்சினையை உங்கள் முன் கொண்டுவருகிறேன்.

இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.கதிரேசனுடன் நான் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, இந்தி மொழிமாற்று உரிமத்தில் 40 சதவீதத்தை எனக்கு தரவேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், சமீபத்தில் கதிரேசன் எனக்கு தெரியாமல் இந்த திரைப்படத்தின் உரிமையை விற்க முயல்வதாக அறிந்தேன்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தில் இந்தப் பிரச்சினையை பதிவு செய்தேன். மேலும், இந்த பிரச்சினையை நான்கு சுவற்றுக்குள் முடிக்க, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பல முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஆனால், கதிரேசனின் ஒத்துழையாமையால் சுமூக முடிவுக்கு வர முடியாமல் போனது. பின்னர், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் ஆலோசனையோடு, வேறு வழியில்லாமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தேன்.

தற்போது சென்னை உயர் நீதிமன்றம் 'ஜிகர்தண்டா' திரைப்படத்தின் மொழிமாற்று உரிமத்தை விற்பதற்குத் தடை விதித்துள்ளது.''

கார்த்திக் சுப்புராஜ் எழுதி, இயக்கிய, சித்தார்த், லட்சுமி மேனன் நடித்த, பல கோடி வசூல் செய்த 'ஜிகர்தண்டா' திரைப்படத்தை சமீபத்தில் இந்தியில் ரீமேக் செய்யப் போவதாக அறிவிப்பு வந்த நிலையில் இந்தத் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

இந்த தடை 11, ஜூன் 2015 வரை, பைவ் ஸ்டார் திரைப்பட நிறுவன உரிமையாளர் கதிரேசன் மீது கார்த்திக் சுப்புராஜ் கொடுத்த ஒப்பந்த மீறல் மற்றும் பதிப்புரிமை மீறல் புகாரின் பேரில் விதிக்கப்பட்டுள்ளது.

பணம் கொடுக்கல் விதி மற்றும் ஒப்பந்த மீறல் காரணமாக விளையக்கூடிய பதிப்புரிமை மீறலின் மேல் கார்த்திக் சுப்புராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில், நீதிபதி ர.மாதவன் இந்த இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

 

Post a Comment