நீ இல்லன்னா முழுமையடையாது.. ஹன்சிகா, வாம்மா 'அரண்மனை'க்கு!

|

சுந்தர் சியின் அரண்மனை 2 படத்திலும் பேயாக வருகிறார் ஹன்சிகா. இதன் மூலம் நான்காவது முறையாக சுந்தர் சி படத்தில் நடிக்கிறார் அவர்.

ஏற்கெனவே சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘தீயா வேலை செய்யனும் குமாரு', ‘அரண்மனை', ‘ஆம்பள' உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

Hansika joins with Aranmanai 2 team

இந்தப் படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட். ‘அரண்மனை' படத்தில் வினய், சந்தானம், ஹன்சிகா, லட்சுமிராய், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த ஆண்டு வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்த வெற்றியை தொடர்ந்து ‘அரண்மனை' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளார் சுந்தர். இதில் சித்தார்த் நாயகனாகவும் த்ரிஷா நாயகியாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஹன்சிகா இந்தப் படத்தில் இல்லை என்று கூறப்பட்டது.

ஆனால் இப்போது ஹன்சிகாவும் நடிக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்த ஹன்சிகா கூறுகையில், "நான்காவது முறையாக என் மனம் கவர்ந்த இயக்குனர் சுந்தர் சியுடன் இணைகிறேன். மீண்டும் அரண்மனை, மிகப்பெரிய ஸ்டார் டீம்' என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இவருக்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ள சுந்தர்.சியின் மனைவி குஷ்பு, 'நீ இல்லாமல் இப்படம் முழுமை அடையாது..,' என்று கூறியுள்ளார்.

 

Post a Comment