மீண்டும் மலர்ந்தது 'தாமரை'!

|

சென்னை: தனது சிறந்த வரிகளால் தமிழ் சினிமா ரசிகர்களை கொள்ளை கொண்ட கவிஞர் தாமரை சில மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் இயக்குனர் கௌதம் மேனன் படத்திற்காக பேனா பிடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பெண்களாலும் நல்ல பாடல்களை கொடுக்க முடியும் என்று நிரூபித்த தாமரை, தன்னை விட்டுப் பிரிந்து சென்ற தனது கணவர் தியாகுவை தன்னுடன் சேர்த்து வைக்க சொல்லி சில மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

Gautham Menon And   Lyricist  thamarai Progress

தற்போது அதில் இருந்து மீண்டு மறுபடியும் இயக்குனர் கௌதம் மேனனின் புதிய படமான அச்சம் என்பது மடமையடா படத்திற்காக பாட்டு எழுதி வருகிறார்.

இனியவளே என்ற படத்தில் இயக்குனர் சீமானால் பாடலாசிரியராக அறிமுகம் செய்யப் பட்டாலும் கௌதம் மேனனின் மின்னலே படத்தில் இடம்பெற்ற வசீகரா என்ற பாடல் தான் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலப் படுத்தியது.

கௌதம் மேனன் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜுடன் இவர் இணைந்து பணியாற்றிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் உள்ள பாடல்கள் அனைத்துமே மாபெரும் வெற்றி அடைந்தது.

மற்ற இயக்குனர்களின் படங்களுக்கு தாமரை பாடல்கள் எழுதினாலும் அது கௌதம் மேனன் பட பாடல்களைப் போல ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை. எனவே மீண்டும் தாமரை கௌதம் மேனன் படத்திற்காக எழுதப் போகும் பாடல்களை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

மீண்டும் தாமரை ஜொலிக்கட்டும்!

 

Post a Comment