போக்கிரி, வில்லு படங்களுக்குப் பிறகு மீண்டும் கைகோர்க்கிறார்கள் பிரபு தேவாவும் விஜய்யும்.
விஜய்யின் கேரியரில் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது போக்கிரி. இந்த வெற்றியை அவருக்குத் தந்தவர் பிரபுதேவா. இந்த அளவுக்கு வில்லு போகவில்லை என்றாலும், பிரபு தேவா - விஜய் கூட்டணி மீது பெரும் எதிர்ப்பார்ப்பு உருவாகிவிட்டது.
பிரபு தேவாவும் அடிக்கடி, விஜய்யை மீண்டும் இயக்க ஆசை என்று கூறி வந்தார்.
இப்போது அவருக்கு அதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது.
சமீபத்தில் விஜய்யைச் சந்தித்த பிரபு தேவா, ஒரு அதிரடி ஆக்ஷன் - காமெடி கதையை அவருக்குச் சொல்லி இருக்கிறார். கதை பிடித்ததால் உடனே சில மணி நேரம் அது பற்றி விவாதித்துமிருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் இயக்குநர் விஜய்யுடன் இணைந்து ஒரு படம் பண்ணவும் முடிவு செய்துள்ளாராம் பிரபு தேவா. இதில் அவர் ஹீரோ மட்டுமே. இதுகுறித்தும் பேசிவிட்டார்களாம். விரைவில் அறிவிப்பு வரவிருக்கிறதாம்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தங்கர் பச்சான் இயக்கத்தில் பிரபு தேவா நாயகனாக நடித்த களவாடிய பொழுதுகள் இன்னும் வெளிவராமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment