முதல் முறையாக நயன்தாராவுக்குக் குரல் கொடுக்கிறார் ஸ்ருதிஹாஸன்... வேறொன்றுமில்லை... அவருக்காக ஒரு பாடலுக்குக் குரல் கொடுத்துள்ளாராம்.
எப்போதோ ஆரம்பித்து, இன்னும் இழுத்துக் கொண்டிருக்கும் சிம்பு - நயன்தாரா நடித்துள்ள இது நம்ம ஆளு படத்துக்காக, இந்தப் பாடலைப் பாடியுள்ளாராம்.
இசையமைத்துள்ளவர் சிம்புவின் தம்பி குறளரசன்.
ஸ்ருதிஹாஸன் ஏற்கெனவே இளையராஜா உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் தமிழில் பாடியுள்ளார்.
இந்தப் படத்தில் ஸ்ருதிஹாஸனுடன் இணைந்து அந்த டூயட்டைப் பாடியுள்ளவர் குறளரசனேதான்.
சிம்பு, குறளரசனின் ஒத்துழைப்பு இல்லாததால் இந்தப் படத்தை விட்டுவிட்டு, சூர்யாவின் ஹைக்கூ என்று படத்தை இயக்கியே முடித்துவிட்டார் பாண்டிராஜ்.
இப்போது பிணக்குகள் தீர்ந்து, மீண்டும் படத்தை ரிலீஸ் பண்ணும் வேலைகளில் மும்முரமாகியுள்ளார்களாம்.
Post a Comment