சென்னை: தமிழ் சினிமா தயாரிப்பாளர் அய்யப்பன் (47) மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார்.
பல வருடங்களாகவே சர்க்கரை நோயால் அவதிப் பட்டு வந்த அய்யப்பன் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் திடிரென்று ஏற்பட்ட மாரடைப்பு அவரது உயிரைப் பறித்து விட்டது. சாருலதா, பொம்மாயி, பேத்தி சொல்லைத் தட்டாதே உள்பட பல படங்களின் தயாரிப்பாளரான இவர் 50க்கும் அதிகமான படங்களின் விநியோகஸ்தராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இறந்த அய்யப்பனின் உடல் அவரது சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இன்று அவரது இறுதி சடங்குகள் நடைபெற உள்ளன.
Post a Comment