சின்னத் திரை நடிகை சந்தோஷிக்கு நகை டிசைனிங், ஆடை வடிவமைப்பில் பெரிய ஆளாக வரவேண்டும் என்பது நீண்ட நாள் கனவு.
அந்தக் கனவை இப்போது நனவாக்கிக் கொண்டுள்ளார். இதற்கென பிரத்தியேகமாக ஷோரூம் திறந்துள்ளார்.
கடைக்குப் பெயர் ப்ளஷ் (Plush).
சென்னையில் மற்ற எந்த இடத்திலும் இல்லாத ஒரு சிறப்பம்சம் பிளஸ்ஸில் இருக்கிறது என்கிறார் சந்தோஷி. மணப்பெண்களுக்கான திருமண உடை, கவரிங் ஆபரணங்கள் ஆகியவற்றை இங்கே ஒரே இடத்தில் வாடகைக்கு பெறமுடியும் என்கிறார்.
சந்தோஷியிடம் பேசினோம்...
"நான் சினிமாவில் கடந்த பதினைந்து வருடங்களாக இருக்கிறேன். ஆனால் சினிமா ஒன்று மட்டுமே என் கனவு இல்லை.. இன்னும் பல பெரிய கனவுகள் எனக்கு இருக்கின்றன. மீடியாவில் நான் இருப்பதால் எனக்கு மேக்கப்பிற்கான அழகு சாதனங்கள், ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் பற்றி நன்றாகவே தெரியும்.
நான் மற்ற அழகு நிலையங்களில் இருந்து என்னுடைய ‘ப்ளஷ்'சை பாரம்பரியத்துடன் வடிவமைத்திருள்ளேன்.. இந்த ஸ்டுடியோவை முழுமையாகக் கவனித்தால் இதற்கென ஒரு தனி அடையாளம் இருக்கும்.
வடிவமைக்கப்பட்ட சேலைகள், விழாக்களுக்கான ஆடைகள், சல்வார், குர்த்தி, டி சர்ட் என அனைத்தும் இங்கே கிடைக்கும்.
அதுமட்டுமல்ல.. நாங்கள் ஆடைகளையும், ப்ளவ்ஸ்களையும் கூட வடிவமைத்து தருகிறோம்," என்றார்.
சென்னை ஆழ்வார்திருநகரில் அமைந்துள்ள இந்த ப்ளஷ்-சை நடிகைகள் ராதிகா மற்றும் சங்கீதா திறந்து வைத்தனர்.
Post a Comment