புதிய தலைமுறை நடத்தும் 'புகை உயிருக்குப் பகை' குறும்படப்போட்டி

|

புகை பிடிக்கும் பழக்கம் ஏற்படுத்தும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வுப் பரப்புரையை புகை உயிருக்குப் பகை என்ற தலைப்பில் புதிய தலைமுறைத் தொலைக்காட்சி மேற்கொண்டு வருகிறது.

பல்வேறு கலந்துரையாடல்கள், விழிப்புணர்வு குறிப்புகளை அடங்கிய அறிவிப்புகள், பிரபலங்களின் பேட்டிகள் ஆகியவற்றைத் தொடர்ந்து ஒளிபரப்பியதுடன் 'புகை உயிருக்குப் பகை' என்ற தலைப்பில் குறும்படங்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தது.

Puthiya Thalaimurai TV's anti tobacco short film competition

புகைப் பிடித்தலின் தீமையை வெளிக்காட்டும் வகையிலும், புகையைத் தவிர்ப்பதை வலியுறுத்தவும் 2 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படங்கள் வரவேற்கப்பட்டன.

அந்தவகையில் சுமார் 300 குறும்படங்கள் வந்து சேர்ந்தன. அவற்றில் ஒளிபரப்புக்குத் தகுதியானவை என 85 குறும்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை புதிய தலைமுறைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன.

அந்த 85 படங்களில் புதிய தலைமுறையின் நடுவர் குழு 25 குறும்படங்களைத் தேர்ந்தெடுத்தது. அந்த 25 படங்களின் படைப்பாளிகளை அரங்கத்திற்கு அழைத்து இயக்குனர் சரண் முன்னிலையில் அந்தப்படங்கள் திரையிடப்பட்டன. அவற்றில் முதல் மூன்று பரிசுகளை வென்ற குறும்படங்களும், 10 ஊக்கப்பரிசு பெற்ற குறும்படங்களையும் இயக்குனர் சரண் தேர்ந்தெடுத்து அறிவித்ததுடன், அவர்களுக்குப் புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் பரிசுகள் அளித்து கவுரவித்தார்.ஞ

மேலும் முதல் இரண்டு பரிசுகளைப் பெற்ற குறும்பட இயக்குனர்களுக்கு தன்னுடன் இணைந்து பணியாற்ற உதவி இயக்குனர்கள் வாய்ப்பையும் தந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இந்த பரிசு வழங்கும் நிகழ்ச்சி புகையிலை எதிர்ப்பு தினமான மே 31 ம் தேதி ஞாயிறன்று மதியம் 12.00 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

 

Post a Comment