சோஷியல் மீடியாவில் ”பாசிட்டிவ்” விமர்சனங்களை அள்ளிக் குவிக்கும் “புறம்போக்கு”

|

சென்னை: தமிழில் சமீபத்தில் வெளியான புறம்போக்கு என்னும் பொதுவுடமை திரைப்படம் பல்வேறு வகையான கருத்துக்களை சமூக வலைதளங்களில் அள்ளிக் குவித்து வருகின்றது.

எஸ்.பி.ஜகன்நாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நாயர் நடித்த படம் புறம்போக்கு என்னும் பொதுவுடமை.

பல்வேறு சமூக பிரச்சனைகள் சார்ந்த களமாக எடுக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம்.

மக்களிடமிருந்து நேர்மறையான கமெண்ட்களே அதிகளவில் இப்படம் பற்றி வெளிவருகின்றன. டுவிட்டரிலும் பல்வேறு டுவிட்டுகள் இப்படம் பற்றிய விமர்சனங்களை வெளியிட்டுள்ளன.

"புறம்போக்கு படம் பார்த்தாச்சு... அருமையான படம். ஆர்யா அசத்தியிருக்கின்றார்கள்" என்று டுவிட்டியுள்ளார் சாந்தினி மதிவாணன் என்ற ரசிகை.

சித் என்பவரோ "புறம்போக்கு படம் கம்யூனிசம் கூறும் படம். படம் பார்க்க அருமை" என்றுள்ளார்.

"புறம்போக்கு மிகவும் சூப்பரான படம்.. நல்ல கதைக்கரு... டிக்கெட் வாங்கிய காசு தப்பித்தது... ஷாம், ஆர்யா, விஜய் சேதுபதி மிரட்டிட்டாங்க" என்று ஒருவர் டுவிட்டியுள்ளார்.

தினேஷ் குமார் என்பவரோ, "எனக்கு பல இடங்களில் புல்லரித்தது. முக்கியமாக ஷாமுக்கும், ஆர்யாவிற்கும் இடையிலான கடைசி பேச்சு அருமை. கண்டிப்பாக பார்க்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

 

Post a Comment